02. சேரன்,சோழன்,பாண்டியன்... என குறிப்பிடப்பட்ட பேருந்துகள் TNSTC என்றும், அரிதாக த.நா.அ.போ.க. என்றும் குறிப்பிடபடுகின்றன... அதற்குப்பதிலாக, “அ.போ.க.” எனச் சுருக்கமாக தமிழிலும், தேவைப்பட்டால் ஆங்கிலதில் “A.P.K.” எனப் பயன்படுத்தலாமே! ஏனெனில், உ.பி. குடிநீர் வாரியம், உ.பி. ஜல் நிகம் என இந்தியிலும், அதே ஒலிப்பில் “U.P. JAL NIGAM” என ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை/பயன்பாட்டில் இருக்கிறதே.. ஏன், நம் அண்டை கருநாடகத்திலும் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பதின் கன்னட வடிவத்தை அப்படியே “Sagakarike Sakkare Mill” என ஆங்கிலத்தில் வழங்குகின்றனர்.
03. தமிழக அரசுக்கு ஒரு இலச்சினை இருக்கிறது.. அரசினர்/செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிடும் தமிழ் விளம்பரங்களில் நாம் பெரும்பாலும் காணும் வடிவில் இருக்கிறது... ஆனால், ஆங்கில மொழியில் விளம்பரம் வரும்போது இலச்சினையில் உள்ள தமிழ் வாசகங்கள் நீக்கப்பட்டு அதன் ஆங்கிலவடிவம் இடம்பெறுகிறது... மேலும் ஆளுநரின் கடிதத்தாளில்(Letter Pad) உள்ள இலச்சினை ஆங்கில வாசகங்கள் மட்டுமே கொண்டதாக தொடர்கிறது...
இருவேறு மொழிகளில் இலச்சினை கொண்ட மாநில அரசு, இந்தியாவில் தமிழகம் மட்டுமே... எத்தகைய இழிவு!............
”ELCOT” நிறுவனத்தின் முகப்பில் ஆங்கிலமொழியில் அமைந்த அரசு இலச்சினை மட்டுமே பிரமாண்டமாக காட்சியளிக்கும் இழிவு தொடர்கிறது...
04. ஒருமுறை சி.பா.ஆதித்தனார் கூறியது நினைவுகூரத்தக்கது: “உலகிலேயே இரண்டு மொழிகளைக் கலந்து பெயர் எழுதுபவன் தமிழனாகத்தான் இருக்கமுடியும்” (எ-டு: K.P.செல்வன்).
05. மா.நன்னன் தமிழ் வளர்ச்சி இயக்குநராக இருந்தபோது, சிறைத்துறையையும் பதிவுத்துறையையும் 100விழுக்காடு தமிழ்மயம் ஆக்கியிருந்தார்.. அவர் குறிப்பிட்ட ஒரு விடயம்: அரசு துறைசார் ஊர்திகளில் அவை அரசினர்க்குரியவை என்பதைக்
குறிக்க வட்டத்துள் “அ” என எழுத அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், அலுவலர்கள் இன்னொரு வட்டத்துள் ஆங்கிலத்தில் “G” எனவும் எழுதியிருந்தனர். அலுவலர்களிடம் G எதற்கு எனக் கேட்டபோது, ”நாம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறோமல்லவா?” என்றனராம்! அதற்கு நன்னன், “இருமொழிக்கொள்கை என்பது கல்விக்கு மட்டுமே” என விளக்கினாராம்.
ஆனால், இருமொழிகளில் குறியிடுதல், தவிர்க்கப்படாமல் இன்னும் நீடிக்கிறது..
06. தமிழைக் காக்க வேண்டிய அரசு, ஆங்கிலத்தில் பேருந்து பயணச்சீட்டு வழங்குகிறது.. ஆனால், தனியார் தமிழில் மட்டும் தருகிறார்கள்... இதைச்சுட்டி அரசைக் கேட்டால், ஆங்கிலத்தோடு தமிழில் அச்சிட்டு வழங்குவோம் என்கிறார்கள்.. ஏன், எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தை துணைக்கிழுக்கும் இந்த இருமொழிப்பித்து?
------ அகமத் கனி
No comments:
Post a Comment