Wednesday, March 3, 2010

அயலில் தமிழ்/தமிழர்க்கு இரண்டகம்

01. 1947க்கு முன்னர் உலகின் குறிப்பிட்ட சில பல்கலை.களின் இந்தியவியல் துறையில் வடமொழியும் தமிழும் மட்டுமே இடம்பெற்றன... பின்னர் அது வடமொழி,இந்தி என்றாகிப்போனது!..
ஏ.கே.ராமனுஜன் மற்றும் ஜார்ஜ் ஹார்ட் போன்ற அறிஞர்களின் தனிப்பட்ட முயற்சியினாலேயே பல பல்கலை.களில் இன்றும் தமிழ் நீடிக்கிறது.. புதிதாகவும் தொடங்கப்பட்டிருக்கிறது - வெளியுறவுத்துறையை கையில் வைத்திருக்கும் மைய அரசினால் அல்ல.

02. ருஷியாவில் (முந்தைய சோவியத்தில்) பள்ளி மணவர்கள்கூட தமிழ் போன்ற மாநில மொழிகளைக் கற்கும் வசதியிருந்தது.. எப்படி? மானவர்கள் முதலில் இந்தி கற்று, அதன் மூலம்தான் தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளைக் கற்கமுடியும்... உள்ளபடியே முதலில் இந்தியை கற்ற மாணவன், இந்தியா பற்றி முழுமையாய் அறிய


இது ஒன்றே போதும் என ஒதுங்கி விடுவான்.....எத்தகைய சூழ்ச்சி இது!

03. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உள்ள அலுவலர்கட்கு ஒரு ஆணை வழங்கப்பட்டிருந்தது.. விவரம்/விசாரணை கோரி வரும் இந்தியர்களிடம் இந்தியில் மட்டுமே உரையாடவேண்டும் – அவர்கள் ஆங்கிலதில் பேசினால்கூட.

04. இலங்கை/மலேசியா/சிங்கப்பூர் போன்ற தமிழர் கணிசமாக வாழும் நாடுகளில் தூதரக அலுவலர்களாக தமிழர்களை (கண்டிப்பாக) நியமிப்பதில்லை; அவர்கள் தமிழ் தெரிந்தவர்களாகவும் இருப்பதில்லை... எத்தகைய வஞ்சனை!
இந்நிலையினாலேயே மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலை தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமற்றப்படும் தமிழர்களுக்கு வேதனை தீர்வதில்லை...

No comments:

Post a Comment